ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.10: ஸ்ரீவில்லிபுத்தூரில் வாக்காளர் பெயர் சேர்த்தல் முகாமில் பங்கேற்கும் அரசு அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு பெயர் நீக்கம், சேர்த்தல் தொடர்பான முகாம் இன்று வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் அருள் ஆனந்தம் பங்கேற்று பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி முகாமில் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சசிகலா, ஸ்ரீவில்லிபுத்தூர் நகரமைப்பு அலுவலர் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் தங்கமாரி முத்து உட்பட ஏராளமான அலுவலர்கள் பங்கேற்றனர்.


