விருதுநகர், அக்.10: பயிறு வகைகளில் அதிக விளைச்சல் பெற்றிட டி.ஏ.பி. கரைசல் பயன்படுத்த வேண்டும் என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளனர். மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள பயிறுவகைகளில் நல்ல தரமான மணிகளை பெற வேளாண் அதிகாரிகள் கூறியதாவது: தரமான பயிர்களை பெற்றிடவும், கூடுதல் மகசூல் பெற்றிடவும் டி.ஏ.பி. கரைசலை இருமுறை தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ டி.ஏ.பி. உரத்தினை முதல் நாள் 10 லிட்டர் நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
மறுநாள் மாலை ஊற வைத்த கரைசலில் இருந்து தெளித்த நீரை வடித்து எடுத்து அதனை 190 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து கைத் தெளிப்பான் மூலமாக பூக்கும் தருவாயில் ஒரு முறையும் மறுமுறை மேற்கூறிய முறையில் மீண்டும் 10 முதல் 15 நாள் இடைவெளியில் கைத் தெளிப்பான் மூலமாக 200 லிட்டரில் கலந்து தெளிக்க வேண்டும். அதன் மூலமாக அதிகப்படியான பூக்களும், திறட்சியான மணிகளும் நல்ல விளைச்சலும் பெறலாம். இவ்வாறு கூறினர்.


