Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முத்தாலம்மன் கோயில் திருவிழா துவக்கம்

வத்திராயிருப்பு, அக்.10: வத்திராயிருப்பு தாலுகாவில் புகழ்பெற்ற முத்தாலம்மன் கோயில் திருவிழா மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. தூத்துக்குடி திருக்கைலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். முத்தாலம்மன் பக்த சபா செயலாளர் விவேகானந்தன் வரவேற்றார்.

விருதுநகர் பள்ளிவாசல் இமாம் முஹம்மது கரீம், ராஜபாளையம் மேலப்பள்ளிவாசல் தலைமை இமாம் முஹம்மது ரபிக் மிஸ்பாகி, விருதுநகர் ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை நித்தின் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். வத்திராயிருப்பு தாசில்தார் சரஸ்வதி, விருதுநகர் மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் தாமோதரன் வாழ்த்தி பேசினர். பக்த சபா தலைவர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.