சிவகாசி, செப். 10: சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் செப்டிக் டேங்க் கழிவு நீர் அகற்ற தனியார் வாகனங்களுக்கு மாநகராட்சி மூலம் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் இன்றி இயங்கும் வாகனங்கள் மீது மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின் பேரில் மாநகர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி பகுதியில் உரிமம் இன்றி இயங்கிய கழிவுநீர் அகற்றும் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வாகன உரிமையாளருக்கு ரூ.5ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
+
Advertisement


