சாத்தூர், செப். 10: சாத்தூர் தெற்கு ஒன்றிய அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஊமத்தன்பட்டியில் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபெருமாள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரி, 4 சட்டக்கல்லூரிகள் தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கான பாசன கண்மாய்களை தூர்வாரி மரமரத்து பணிகளை செய்து கொடுத்தார்’’ என்றார். இதனை தொடர்ந்து ஒன்றிய நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். கூட்டத்தில் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எதிர்கோட்டை சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை, சீதாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


