சாத்தூர், செப். 10: சாத்தூர் அருகே முத்தார்பட்டியை சேர்ந்தவர் அழகன் (61). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. நேற்று முன் தினம் பக்கத்து வீட்டு கோழி இவரது வீட்டுக்குள் வந்துள்ளது. அதை அழகன் கல்லால் எறிந்துள்ளார். அதை மனைவி தட்டிக்கேட்டுள்ளார்.
அதில் மனமுடைந்த அழகன் தனது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தினார். மயமடைந்தவரை அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


