வத்திராயிருப்பு, ஆக.10: போதிய மழை மழை இல்லாததால் சதுரகிரி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில் வழங்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு சென்றால் நினைத்த காரியங்கள் நடக்கும் என்பதால், தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வருடம் தோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12ம் தேதி நடைபெற உள்ள நிலையில், 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.



