ராஜபாளையம், ஆக.10: ராஜபாளையம் தாலுகா மில் கிருஷ்ணாபுரம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த சமுத்திரம் மகன் ராகவேந்திரன் (38). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவர், ராணி மங்கம்மாள் என்பவரை திருமணம் செய்து 10 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற ராகவேந்திரன், பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, ராஜபாளையம் சங்கரன்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயிலில் அடிபட்டு ராகவேந்திரன் உயிரிழந்த நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், ராகவேந்திரன் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும், சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
+
Advertisement



