சாத்தூர், அக்.9: சாத்தூரில் குற்றங்களை தடுக்க போலீசார் விழிப்புணர்வு நடைபயணம் சென்றனர். நகர் காவல்நிலைய போலீசார் விருதுநகர் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கருப்பையா தலைமையில் சாத்தூர் மெயின்ரோடு, பேருந்து நிலையம், குறுகிய வீதிகள், சந்தைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றங்களை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கவும் நேற்று முன்தினம் நடைபயணம் சென்றனர். இதில் சாத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் குருசாமி, நகர் காவல் நிலைய ஆய்வாளர் துரைப்பாண்டி, போக்குவரத்து ஆய்வாளர் சீமான் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
+
Advertisement


