சாத்தூர், அக்.9: சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை முதல் மதியம் வரை கடும் வெயில் தாக்கம் இருந்து வந்தது. மாலை நேரத்தில் வெயில் தாக்கம் குறைந்து லேசான காற்றுடன் சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை 11 மணி முதல் வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது. கனமழையால் தண்ணீர் செல்ல வழியில்லாததால் சாலையில் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.
+
Advertisement


