ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.9: புரட்டாசி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு பிறந்த இடமான நந்தவனத்தில் ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒவ்வொரு மாதமும் வரும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் நாச்சியார் தனது பிறந்த இடமான நந்தவனத்தில் பக்தர்களுக்கு சர்வ அலங்காரத்தில் காட்சியளிப்பார். நேற்று புரட்டாசி மாத பூரம் நட்சத்திரம் என்பதால் ஆண்டாள் நந்தவனத்தில் காட்சியளித்தார்.
முன்னதாக மேளதாளங்கள் முழங்க ஆண்டாள் கோயிலில் இருந்து நந்தவனத்திற்கு எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள், தீப ஆராதனைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சர்வ அலங்காரத்தில் ஆண்டாள் நாச்சியார் காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


