ராஜபாளையம், செப்.9: ராஜபாளையம் அருகே அய்யனாபுரத்தில் கோயில் அமைந்துள்ள நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜபாளையம் அருகே அய்யனாபுரம் கிராமத்தில் பழமையான விநாயகர் கோயில் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நிர்வாகத்தின் கீழ் உள்ள இந்த கோயிலை புனரமைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. கோயில் அமைந்துள்ள நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி வருவாய்துறையில் மனு அளிக்கப்பட்டது.
நிலத்தை அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு பிரிவினர் கோயிலில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, கோயில் உள்ள நிலத்தை அளவீடு செய்ய வருவாய்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கோயில் நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் உள்ள நிலத்தை அளவீடு செய்ய மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


