Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

56 கிலோ குட்கா பறிமுதல்

ராஜபாளையம், ஜூலை 9: ராஜபாளையம் அருகே 56 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார், அய்யனார் கோயில் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் சட்ட விரோதமாக குட்கா பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 29.5 கிலோ குட்கா பொருள், ரூ.2300 ரொக்கம், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த யோகேஸ்வரன் (31) என்பவரைக் கைது செய்தனர்.