சிங்கம்புணரி, அக்.8: சிங்கம்புணரி வடக்கு தெருவை சேர்ந்த வீரபாண்டியனுக்கு சொந்தமான தென்னை நார் கம்பெனி நாட்டார்மங்கலம் அருகில் செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் தென்னை மட்டையிலிருந்து தென்னை நார் காயர் பித் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னை நார் கம்பெனியின் ஒரு பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு துறை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளான தென்னை நார் பொருட்கள் எரிந்து சாம்பலாயின. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


