Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிவகாசி, அக்.8: சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சங்கரேஸ்வரன்(33) என்பவர் சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அழுதபடி உறவினர்களிடம் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கரேஸ்வரனை தேடி வருகின்றனர்.