காரியாபட்டி, அக்.8: காரியாபட்டி நாசர் புளியங்குளத்தை சேர்ந்த கல்யாணி, இரும்பு கடை வைத்துள்ளார். அவரது கடையில் செட்டிகுளத்தை சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் வேங்கைமார்பன் கோழி ஷெட் அமைக்க பொருட்கள் வாங்கினார். இதில் ரூ.25 ஆயிரம் பாக்கி இருந்துள்ளது.
மறுபடியும் கடனுக்கு பொருட்கள் கேட்டபோது கல்யாணி கொடுக்க மறுத்து, பாக்கி தொகையை கேட்டார். இதனால் ஆத்திரமடைந்து வேங்கைமார்பன் உள்ளிட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்யாணி அளித்தபுகாரின் பேரில், அதிமுக ஒன்றிய செயலாளர் வேங்கை மார்பன், மதியழகன், கட்டாரி மீது காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


