சாத்தூர், செப்.8: சாத்தூர் தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளருக்கு, சின்னகொல்லபட்டி பிள்ளையார் கோவில் அருகே புகையிலை மூட்டைகளை காரில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களுக்கு மாற்றி கொண்டு இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் வந்தது. இதனால் சம்பவ இடத்திற்கு போலீசாருடன் சென்ற போது, போலீசாரை பார்த்தவுடன் 2 கார்கள், இருசக்கர வாகனத்தையும் அங்கே விட்டு விட்டு பதிவெண் இல்லாத காரில் தப்பி சென்றனர். கார் மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி போலீசார் சோதனை செய்த போது, அங்கு சாக்கு மூட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையில் பொட்டலங்கள் இருந்தது.
அப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் புகையிலை பொருட்கள் கடத்தியது அமீர்பாளையத்தை சேர்ந்த தினேஷ்குமார்(27), அவரது தந்தை உலகநாதன் (54) என தெரியவந்ததை தொடர்ந்து தப்பி சென்ற இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். புகையிலை கடத்தலுக்கு பயன்படுத்திய கார்கள் 2 இருசக்கர வாகனம், 1 புகையிலை மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த புகையிலை மதிப்பு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ஆகும்.


