தொண்டி, ஆக. 8: தொண்டியில் உள்ள குளத்தை தூர்வாரும் பணியினை கலெக்டர் துவக்கி வைத்து விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். தொண்டியில் உள்ள குண்டு குளம் நீண்ட காலமாக தூர்வாரப் படாததால், மண் மேடாகி தாமரை செடிகள் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இக்குளத்தை தூர்வார கோரி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.
இந்நிலையில் தொண்டு நிறுவனம் மூலம் குளம் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் சிவகுரு பிரபாகரன் நேற்று இப்பணியினை துவக்கி வைத்தார். இதையடுத்த செய்யது முகம்மது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நடக்கும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். தொண்டி பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைவர் ஷாஜகான் பானு மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



