சிவகாசி, செப்.7: சிவகாசி அருகே எம்.புதுப்பட்டி போலீஸ் நிலைய போலீசார், எம்.மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் கண்ணன் (45) என்பவர் அவரது வீட்டில் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயாரித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
+
Advertisement


