Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தாணிப்பாறை அடிவார பகுதியில் கடைகள் அகற்றும் பணி பாதியில் நிறுத்தம்

வத்திராயிருப்பு, ஆக 7: மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. அடிவாரப் பகுதியான தாணிப்பாறை அடிவாரத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தனிநபர் ஒருவர் கடைகள் அமைத்து 14 கடைகள் வாடகைக்கு விட்டிருந்தார்.

இது சம்பந்தமாக வருவாய்த் துறையினர் மூலம் சம்பந்தப்பட்ட இடத்தினை அளவீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த இடமானது வனத்துறைக்கு தான் சொந்தம் என தெரியவந்தது.தொடர்ந்து நேற்று வருவாய்த் துறையினர் வனத்துறையினர் மற்றும் போலீசார் 14 கடைகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து தனிநபர் 14 கடைகளும் எனது சொந்த பட்டா இடத்தில் உள்ளது என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் நேற்று திடீரென வழக்கு தொடர்ந்தார். இதனை அடுத்து அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, வனத்துறையினர் மற்றும் வழக்கு தொடர்ந்து நபர் இடம் யாருக்கு சொந்தம் என தங்களிடம் உள்ள ஆதாரங்களை நாளை (ஆக.8ம் தேதி) கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து பாதி கடைகளை எடுத்த நிலையில் மீதமுள்ள கடைகளை அகற்றாமல் அங்கிருந்து வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் கிளம்பி சென்றனர்.