விருதுநகர், ஆக. 7: விருதுநகர் சூலக்கரை பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் பழனி (27). தனியார் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சூலக்கரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். நேற்று மாலை வேனில் குழந்தைகளை இறக்கி விட சென்ற போது சூலக்கரை அருகே தனியார் நூற்பாலை அருகே வந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதி மாணவர்கள் 6 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த சூலக்கரை போலீசார் குழந்தைகளை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து சூலக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிச் சென்ற ஓட்டுனர் பழனியை தேடி வருகின்றனர்.
+
Advertisement




