Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சில்லரை விற்பனையில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தல்

சிவகாசி, மே 6: இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் சுமார் 20 கோடி பேர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் சுமார் 40 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதில் 5 கோடி சில்லரை வணிக நிறுவனங்கள் 93 சதவீத முறைசாரா வணிகத்தை தக்க வைத்துள்ளது. ஆனால் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தால் சில்லரை வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பொருட்கள், எலெட்ரிக்கல், எலெக்டாரானிக்ஸ், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் முறையாக வரி செலுத்தாமல் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் ஆன்லைன் மூலம் செய்யப்படும் விற்பனை அதிகரித்து வருகிறது. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் கலால், சேவை வரி, வணிக வரித்துறை பதிவு உள்ளிட்டவை முறையாக செய்வதில்லை. பொருட்களின் அடக்கவிலை, கலால் வரி, மதிப்பு கூட்டு வரி எவ்வளவு என்பதை தெளிவாக குறிப்பிடுவதில்லை.