ராஜபாளையம், நவ.5: ராஜபாளையம் அருகே பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம் அருகே சேத்தூர் ஊரக காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் ஹரிராம் போலீசாருடன் தென்காசி சாலை கோவிலூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். மூட்டையில் மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
அந்த நபரை விசாரித்தபோது, ராஜபாளையம் பெரியகடை பஜார் பகுதியை சேர்ந்த அய்யர்(42) என்றும் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி மது கடைகள் இல்லாத இடங்களுக்கு சென்று கூடுதல் விலைக்கு விற்பதற்காக எடுத்துச்செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்த போலீசார், 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


