சாத்தூர், நவ. 5: சாத்தூர் அருகே உள்ள ஸ்ரீரெங்காபுரத்தைச் சேர்ந்தவர் காளிராஜ் (39). இவர் பட்டாசு தயாரிக்கும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி வேளாங்கண்ணி (39). இத்தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த காளிராஜ், தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் தனது மனைவியிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காளிராஜ் மனைவி வேளாங்கண்ணி அளித்த புகாரின்பேரில், சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து, காளிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


