சிவகாசி, நவ.5: திருத்தங்கல் மேலரதவீதியை சேர்ந்தவர் முத்துசாமி மகன் கார்த்திக் ராஜா (25). இவர் நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த கார்த்திக்ராஜா தனது வீட்டின் அருகில் உள்ள நின்றநாராயணபெருமாள் கோவிலுக்கு மோட்டார் பைக்கில் சென்றார்.
வாகனத்தை கோவில் முன்பு நிறுத்தி விட்டு உள்ள சென்று சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது அவர் நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் பைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கார்த்திக்ராஜா திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


