Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காரியாபட்டி அருகே சிவகாசி அரசு மருத்துவமனையில் டூவீலர் பறிமுதல்

காரியாபட்டி, ஆக. 5: காரியாபட்டி பள்ளத்துப்பட்டி சாலையில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனைக்காக கடத்தப்பட்டு வருவதாக காரியாபட்டி போலீஸ் எஸ்ஐ வீரணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் பள்ளத்துப்பட்டி சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில், டூவீலரில் இருந்த கட்டப்பையில் மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டு வந்தது தெரியவந்தது.

விசாரணையில், காரியாபட்டி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் (57) மற்றும் முஸ்தபா நகர் பகுதியைச் சேர்ந்த முருகேஸ்வரி (50) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 28 மதுபாட்டில்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து காரியாபட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.