விருதுநகர், ஆக. 5: விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் குடோனில் இருந்து மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு செல்லும் லாரிகளுக்கான டெண்டர் எடுத்து தருவதாக கூறி சவுந்தர்ராஜன் என்பவரிடமிருந்து ரூ.22 லட்சம் மோசடி செய்த வழக்கில் அருப்புக்கோட்டையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன் (32), சதீஷ்குமார் (27) ஆகியோரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ஆக. 1ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கோவை பகுதியை சேர்ந்த பிரசாந்த் (34) என்பவர் தலைமறைவானார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வரும் பிரசாந்தை, விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
+
Advertisement
