காரியாபட்டி, செப். 5: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் புதிய சுகாதார வளாகம் கட்டி தர வேண்டும் என நோயாளிகள் மற்றும் பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று பேரூராட்சி நிர்வாகம் சார்பாக ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் செந்தில் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர் சங்கரேஸ்வரன் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement


