Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கட்டிட தொழிலாளி மீது வழக்குப்பதிவு

சிவகாசி, ஜன.5: கட்டிட தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகாசி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்ததாக ஊர்நல அலுவலர் மணிமாலாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணிமாலா அந்த கிராமத்துக்கு சென்று விசாரித்தார். அவரது விசாரணையில் 17 வயது சிறுமிக்கும் கட்டிட தொழிலாளி வீரசிங்கம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சிறுமியும், வீரசிங்கமும் திருமணம் செய்து கொள்ளாமல் பல முறை தனிமையில் இருந்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது உறுதி செய்யப்பட்டது. திருமணம் செய்து கொள்ளாமல் சிறுமியை பலாத்காரம் செய்த வீரசிங்கம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மணிமாலா சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.  அந்த புகாரின் பேரில் வீரசிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.