சிவகாசி, நவ. 4: சிவகாசியில் போலியான ஆவணம் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக சப்-ரிஜிஸ்டர் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிவகாசி அருகே தேவர்குளம் எழில்நகரை சேர்ந்தவர் குருவையா மனைவி பிரேமா (60). இவர் கடந்த 2012ம் ஆண்டு நாகலிங்கம் மகன் நல்லதம்பி என்வரிடம் நிலம் வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தார்.
அந்த நிலத்தை பிரேமாவின் மகன் முனியசாமி தானசெட்டில்மென்டாக ஆவணம் தயார் செய்து பத்திரம் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு மண்ணுக்குமீண்டான்பட்டியை சேர்ந்த காளிமுத்து மகன் நல்லதம்பி உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து மூதாட்டி பிரேமா சிவகாசி கோர்ட்டில் புகார் கொடுத்தார். கோர்ட் உத்தரவின்படி நல்லதம்பி, முனியசாமி, பத்திர எழுத்தர், சப்-ரிஜிஸ்டர் என 4 பேர் மீதும் சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


