சிவகாசி, நவ. 4: சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் கலைசெல்வன் (29). இவரும் மீனம்பட்டியை சேர்ந்த ராசையா, சிவக்குமார் ஆகியோர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று 3 பேரும் மது அருந்திக்கொண்டு இருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ராசையா, சிவக்குமார் ஆகியோர் அங்கிருந்து கட்டையை எடுத்து கலைசெல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் ராசையா, சிவக்குமார் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


