Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விதிமுறையை கடைபிடிக்காத வாகனங்களால் விபத்து அபாயம்

சிவகாசி, ஜூன் 4: போக்குவரத்து துறைக்கு தனி விதிமுறை விதிக்கப்பட்டு அதன்படி வாகன ஓட்டிகள் பயணித்தால் மட்டுமே விபத்துக்களை குறைக்க முடியும் என்பதற்காக விதிமுறைகள் வகுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. சிவகாசியை பொறுத்தவரையில் சில டூவீலர், 4 வீலர் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.

எதிர் சாலையில் பயணித்தல், ஹெல்மெட் அணியாமல் பயணித்தல் உள்ளிட்டவைகளால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. ஆகையால் போலீசார் விதிமுறைகளை மீறி இயங்கும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.