Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

மின்சாரம் தாக்கி ஆடுகள் பலி: மின் ஊழியர்கள் அலட்சியம் என புகார்

காரியாபட்டி, ஜூன் 4: காரியாபட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது மின்சார வாரிய ஊழியர்களின் கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். காரியாபட்டி அருகே வெற்றிலைமுருகன் பட்டி கிராமத்தில் காட்டு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்சார வயர் அறுந்து கிடந்தது. இது குறித்து கிராம மக்கள் சம்பந்தப்பட்ட மின்சார அலுவலர்களுக்கு உடனடியாக புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனாலும் அறுந்து கிடந்த மின்வயர் அகற்றப்படாமல் கிடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த சேகர் என்பவரது ஆடுகள் காட்டு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது கீழே அறுந்து கிடந்த வயரில் 2 ஆடுகள் சிக்கி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியாகின. ஏற்கனவே மின்சார கம்பி அறுந்து கிடந்ததாகவும் மின்சார வாரியத்தின் கவனக்குறைவின் காரணமாகவே இந்த விபத்து நடந்துள்ளதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.