Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாத்தூர் அருகே மக்கள் அரங்கம் கட்டுமான பணி: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

சாத்தூர், மார்ச் 4: சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி ஊராட்சி விஜயராம் பேரியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு புதிய சமுதாய கூடம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அப்பகுதிக்கு சுற்றுப்பயணம் சென்றபோது கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதை தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக மக்கள் அரங்கம் கட்டுவதற்கு அமைச்சர் ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தார். மக்கள் அரங்கம் கட்டுமான பணிகளை நேற்று பூமிபூஜை செய்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை முன்னாள் ஒன்றிய சேர்மன் சுப்பாராஜ், விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜகுரு, ஒன்றிய செயலாளர் கனிமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.