Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

வத்திராயிருப்பில் கழிவறை கான்கிரீட் பெயர்ந்து விழுந்து பள்ளி மாணவர் காயம்

வத்திராயிருப்பு, நவ.3: வத்திராயிருப்பில் கழிவறையில் காரை பெயர்ந்து விழுந்து பள்ளி மாணவர் காயமடைந்தார். வத்திராயிருப்பு பேரூராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு கிழக்கு தெருவில் பொது கழிவறை மற்றும் குளியல் தொட்டி அமைந்துள்ளது. இவை பழுதடைந்து கிடந்ததால் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுவதுமாக சீரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு தெருவை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் தங்கப்பாண்டி(14) நேற்று காலை கழிவறைக்கு சென்றார். அப்போது கழிப்பறை கான்கிரீட் மேல் சுவர் சிமெண்ட் பெயர்ந்து விழுந்தது. இதில் மாணவரின் காலில் காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட கழிவறையின் மேல் கான்கிரீட் சிமெண்ட் பூச்சு விழுந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், கழிவறை முழுமையாக சீரமைக்கப்படவில்லை. இதனால் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.