Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்க அழைப்பு: அரசு தேர்வுகள் இயக்ககம் தகவல்

விருதுநகர், ஆக. 3: கடந்த ஜூன் / ஜூலை மாதங்களில் பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களது விடைத்தாள்களின் ஸ்கேன் நகல் பெறுவதற்கு ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: ஜூன் / ஜூலை 2026 துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 31ல் வெளியிடப்பட்டன. விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது குறிப்பிட்ட மாவட்டங்களில் முதன்மைக்கல்வி அலுவலகங்களில் ஆகஸ்ட் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் கட்டணம் செலுத்தி, விடைத்தாள் ஸ்கேன் நகலுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டுமே, பின்னர் மறு மதிப்பீடு அல்லது மறு கூட்டல் கோரி விண்ணப்பிக்கலாம். மேலும் கட்டணத்தை கருவூல இணையதளம் மூலம் மின்னணு சலான் வாயிலாக செலுத்தி, அதன் ரசீதுடன் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டு இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.