சிவகாசி, அக். 2: சிவகாசி அருகே சட்டவிரோதமாக வீட்டில் தயாரித்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசி அருகே வி.சங்கரலிங்காபுரம் கிராமத்தில் சில வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அந்த கிராமத்தில் கிழக்கு போலீசார் திடீர் சோதனை செய்தனர். அப்போது கணேசன் மகன் ராஜசேகர் என்பவரின் வீட்டில் சட்ட விரோதமாக வேதிப்பொருட்கள் பதுக்கி வைத்து பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து மூலப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ராஜசேகரை தேடி வருகின்றனர்.
+
Advertisement

