ராஜபாளையம், அக்.2: ராஜபாளையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் பின்புறம் இறந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார், எதனால் இறந்தார் என்று இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் (பொறுப்பு) விசாரணை செய்து வருகிறார்.


