Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தனியார் நிகழ்ச்சிகளில் உணவு வீணாவதை தவிர்க்க வேண்டும்: அதிகாரிகள் வலியுறுத்தல்

சிவகாசி, ஜூலை 2: தனியார் விழாக்கள் மற்றும் அன்னதானக் கூடங்களில் உணவுகள் வீணாகுவதை தவிர்த்து அவைகளை பிறவகை பயன்பாட்டிற்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: அரசு சார்ந்து இயங்கும் உணவகங்கள் மற்றும் விடுதிகளையும் உணவுப் பாதுகாப்புத்துறையின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். விடுதிகளில் சமைக்கப்பட்ட உணவுப்பொருட்களின் மாதிரிகளை எடுத்து வைக்க வேண்டும். தனியார் விழாக்கள் மற்றும் அன்னதானக் கூடங்களில் உணவுகள் வீணாவதை தவிர்த்து அவைகளை பிறவகை பயன்பாட்டிற்கு உட்படுத்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உணவுப் பொட்டலங்களில் ஏற்கனவே, லேபிள்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதன் மீது புதிய லேபிள்கள் ஒட்டுவதை தவிர்த்திட வேண்டும்.

விழாக் காலங்களின் போது தற்காலிமாக அமைக்கப்படும் கடைகள் அரசின் விதிமுறைகளை அறிந்து தங்களது வியாபாரங்களை மேற்கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும். தரமான உணவுப்பொருட்கள் தயாரிப்பதையும் மற்றும் எண்ணெய் வகைகளை மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். உணவகங்களில் பூச்சிகள், ஈக்கள் போன்றவை புகாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத உணவு வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.