Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

ராஜபாளையம், ஜூலை 1: ராஜபாளையம் இஎஸ்ஐ காலனியில் வசித்து வருபவர் பத்மாவதி(55). இவரது கணவர் கார்த்திக் ராஜா, இறந்து விட்டதால் தனியாக வசித்து வருகிறார். இவரது மகன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பத்மாவதி கடந்த 4 தினங்களுக்கு முன்பு வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு அரியலூரில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார்.

நேற்றுமுன்தினம் மாலை கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் பத்மாவதிக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து உடனடியாக ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் வைத்திருந்த 2 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.