ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 1: ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரிகள் கவுன்சிலிங் மூலம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பிள்ளையார் குளம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த லட்சுமி என்பவர் சிங்கம்மாள்புரம் கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அச்சம் தவித்தான் பகுதியில் பணிபுரிந்து வந்த ராஜேந்திரன் பொன்னாங்கண்ணி பகுதிக்கு கிராம நிர்வாக அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று, படிக்காசு வைத்தான் பட்டி பகுதியில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதேவி மம்சாபுரம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்பனூர் பகுதியில் பணிபுரிந்து வந்த பாண்டி ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தைலாகுளம் பகுதியில் பணிபுரிந்து வந்த ஆறுமுக குருசாமி அத்திகுளம் செங்குளம் பகுதிக்கும், அயன் நாச்சியார் கோவில் பகுதியில் பணிபுரிந்து வந்த மனோஜ் குமார் வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மம்சாபுரம் பகுதியில் பணிபுரிந்து வந்த முருகேசன், தைலாகுளம் பகுதிக்கும், பொன்னாங்கண்ணி கிராமத்தில் பணிபுரிந்து வந்த கண்ணன் அச்சம் தவிர்த்தான் கிராமத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வடக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் பணிபுரிந்து வந்த அழகர்ராஜ், விழுப்பனூர் பகுதிக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பணிபுரிந்து வந்த ராஜகுரு படிக்காசு வைத்தான் பட்டி பகுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்திகுளம் செங்குளம் பகுதியில் பணிபுரிந்து வந்த சங்கரேஸ்வரி, மல்லி கிராமத்திற்கும், சிங்கம்மாள்புரம் பகுதியில் பணிபுரிந்து வந்த பெரியசாமி பிள்ளையார் குளம் பகுதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


