Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

100 நாள் வேலை வழங்கக் கோரி மக்கள் முற்றுகை போராட்டம்

சாத்தூர், ஜூன் 9: சாத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 47 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை நடைபெற்று வருகிறது. நூறுநாள் வேலை ஒரு கிராமத்தில் 5 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வேலை வழங்கவும் முழு கூலி வழங்கவும் வலியுறுத்தி நாருகாபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். பின்னர் தனித்தனி நபர்கள் சார்பில் 60 மனுக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா குழு உறுப்பினர் பாலசுப்பு, தாலுகா குழு செயலாளர் மனோஜ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார், மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய பொருளாளர் முனியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.