Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ரூ.5,000 தீபாவளி போனஸ் வழங்கக் கோரி; மனு கொடுக்கும் போராட்டம்..!

வத்திராயிருப்பு, அக். 28:  வத்திராயிருப்பில் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.5,000 வழங்க வலியுறுத்தி, மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது, வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து சென்று தங்களது கோரிக்கை மனுக்களை துணை வட்டாட்சியர் ரவியிடம் வழங்கினர். மேலும், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும்,

தொழிலாளர்களின் வேலை அட்டைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும், பழைய முறையில் கையொப்பமிட்டு வேலை பெறும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களுக்கு காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வத்திராயிருப்பு தாலுகா செயலாளர் கோவிந்தன் மற்றும் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ராமதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ராமசாமி கலந்து கொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.