ராஜபாளையம், செப். 26: ராஜபாளையம் சிவகாமிபுரம் தெருவில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் பாக்கியராஜ், உதவி ஆய்வாளர் இலக்கியமுத்து மற்றும் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 17 கிலோ புகையிலை பொருட்களைப் பையில் மறைத்து வைத்துக் கொண்டு சென்றது தெரியவந்தது. இது குறித்து சர்ச் தெருவைச் சேர்ந்த உதயசூரியன் (44) என்பவரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
+
Advertisement


