Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அதிகாரிகள் அலைக்கழிப்பு உதவித்தொகை கிடைக்காமல் பரிதவிக்கும் முதியவர்கள்

சிவகாசி, செப். 25: சிவகாசியில் முதியோர் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 4ம் தேதி உதவித்தொகை வரவு வைக்கப்படும் நிலையில் நேற்று வரை கிடைக்காததால் முதியவர்கள் தவித்து வருகின்றனர்.சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு வழக்கமாக மாதம்தோறும் 4ம் தேதிக்குள் முதியோர் உதவித்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்நிலையில், இந்த மாதம் முதியோர்களுக்கு உதவித் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

4ஆம் தேதி வர வேண்டிய உதவித்தொகை, சுமார் 20 நாட்கள் கடந்தும் இன்னும் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முதியோர்கள், தாலுகா அலுவலகத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து வருகின்றனர். இதுபற்றி வங்கியில் சென்று கேட்டால் தாலுகா அலுவலகத்தில் விசாரியுங்கள், தபால் நிலையத்தில் புதிய அக்கவுண்ட் ஒன்றை ஓபன் செய்யுங்கள் என்று கூறி அலைக்கழித்து வருகின்றனர்.