Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு மீண்டும் அரசு பஸ்; அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்

சிவகாசி, ஜூலை 24: சிவகாசி ரயில்வே ஸ்டேஷனில் பத்துக்கும் மேற்பட்ட முறை ரயில்கள் நின்று செல்கின்றன. தொழில் நகரம் என்பதால் தினமும் ஏராளமானோர் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். தவிர இங்கிருந்து விருதுநகர், மதுரைக்கு செல்லும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்களும் ரயில் போக்குவரத்தினை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

ஆனால் ரயில்வே ஸ்டேஷனிற்கு, பஸ் ஸ்டாண்டிலிருந்து மட்டுமல்லாது வேறு எந்த பகுதியில் இருந்தும் பஸ் வசதி இல்லை. இதனால் பயணிகள் ஆட்டோவில் ரூ.200 வரை கொடுத்து வருகின்றனர். குறைந்த கட்டணத்தில் வசதியாக சென்று வருவதற்காக ரயிலை பயன்படுத்தியும், ரயில்வே ஸ்டேஷனுக்கு வர அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.