Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இளம்பெண் கழுத்தறுத்து தற்கொலை

விருதுநகர், மே 23: விருதுநகர் அருகே உள்ள படந்தாலை சேர்ந்தவர் செந்தட்டி(35). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி மாரிச்செல்வி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மாரிச்செல்வி நடுவப்பட்டியிலுள்ள தனது தாய் பொன்னுத்தாய் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று அதிகாலை திடீரென வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து மாரிச்செல்வி தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். காலை விழித்த பொன்னுத்தாய் சமயலறையில் மகள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த வச்சக்காரபட்டி போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.