Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

காட்டிற்குள் மது விற்றவர் கைது

ஏழாயிரம்பண்ணை, மே 23: வெம்பக்கோட்டை அருகே சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வெம்பக்கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குருநாதன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் ரோட்டில் உள்ள பட்டாசு ஆலை பின்புறம் உள்ள காட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த நபரை சோதனை செய்தனர். அங்கு மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அங்கிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அன்னபூர்ணியாபுரம் பகுதியை சேர்ந்த பொன் இருளாண்டி (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.