Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

ஏழாயிரம்பண்ணை. ஜூன் 22: வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் ஆலங்குளம் போலீஸ் எஸ்ஐ ஆனந்த்குமார் தலைமையில் அதிகாரிகள் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழாண்மறைநாடு பகுதியில் வசிக்கும் கெங்கேஸ்வரன் (36) என்பவர், தகர செட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிப்பது தெரியவந்தது.இதுகுறித்து வழக்கு பதிவு ெசய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் பட்டாசுகள் தயாரிக்க அவர் பயன்படுத்திய மூலப்பொருட்கள் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளையும் பறிமுதல செய்தனர்.