Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெட்ரோல் விலை உயர்வு: தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், மே 22: பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து விருதுநகரில் அனைத்து சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜ அரசானது சாதாரண ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தி வரும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது. இதனால், விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட விலையை ரத்து செய்யக் கோரி அனைத்து சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு எல்.பி.எப் மாவட்டத் தலைவர் மாடசாமி தலைமையேற்றார். துவக்கி வைத்து ஏஐடியுசி சார்பில் பாண்டியன் பேசினார். முடிவில் சிஐடியு மாவட்டத் தலைவர் மகாலட்சுமி கண்டன உரையாற்றினார். மேலும் இதில் சிஐடியு நிர்வாகிகள் பாண்டியன், சாராள், தொமுச சார்பில் ராஜசெல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.